காங்கிரஸ் கட்சியும், ராகுலும் மன்னிப்பு கேட்க வேண்டும்!

காங்கிரஸ் கட்சியும், ராகுலும் மன்னிப்பு கேட்க வேண்டும்!


புதுடில்லி: 


காஷ்மீர் குறித்து தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியும், ராகுலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டில்லியில் அவர் அளித்த பேட்டி: ஜம்மு காஷ்மீர் குறித்த தனது கருத்தால், தேசத்தை ராகுல், அவமானப்படுத்திவிட்டார். அவரின் கருத்தை, பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது.


இதற்காக அவரும்,ராகுலும் மன்னிப்பு கேட்க வேண்டும். காஷ்மீர் உள்நாட்டு விவகாரம் எனக்கூறியுள்ள ராகுல், அங்கு வன்முறையை பாகிஸ்தான் தூண்டி வருவதாக கூறியுள்ளார். 


இவ்வாறு பல்டி அடிக்க என்ன காரணம். மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.

காஷ்மீரில் நிலைமை தவறாக உள்ளதாகவும், மக்கள் இறப்பதாகவும் ராகுல் கூறியுள்ளார். ராகுல் கருத்து தவறு. காஷ்மீரில், அனைத்தும் நன்றாக உள்ளது. வன்முறை ஏதும் இல்லை. மக்கள் யாரும் இறக்கவில்லை. 


ராகுலின் கருத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி, ஐ.நா.,வில் மனு செய்துள்ளது. அந்த மனுவில், காஷ்மீரில் வன்முறை நடப்பதை, இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சி உறுதி செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்போதும் இல்லாத வகையில், காங்கிரஸ் மோசமான அரசியல் செய்கிறது. காங்கிரசின் அறிக்கை, 70 ஆண்டுகளாக, நாட்டை ஆண்ட கட்சி திவாலானதை காட்டுகிறது. இதற்கு முன்னர், நமது நாட்டில், கட்சியின் அறிக்கை, தேசத்திற்கு எதிராக பயன்பட்டது கிடையாது. 

அக்கட்சி மற்றும் அதன் தலைவர்கள்பயன்படுத்தும் வார்த்தைகளை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


rahul want to say sorry# tamil live news# live news# rahul mass speech# rahul gandhi vs bjp# bjp prakash javdekar vs rahul

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.