ரஜினியின் "தர்பார்"

ரஜினியின் "தர்பார்" ‘தர்பார்’ திரைப்படத்துக்கு, கலைநயத்துடன் ரசிகர்கள் வடிவமைக்கும் போஸ்டர் டிசைன்களில் ஒன்று அதிகார பூர்வமாக வெளியிடப்படும் என அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகும் ‘தர்பார்’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். 

லைகா நிறுவனத் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் ரஜினி போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரம் ஏற்றுள்ளார். 

இந்நிலையில் போலீஸ் அதிகாரி உடையில் இருக்கும் ரஜினியின் HD புகைப்படங்கள் மற்றும் படத்தின் பேர் ஆகியன வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட ஏ.ஆர். முருகதாஸ், இந்த புகைப்படங்கள் மற்றும் பட தலைப்பை வைத்து கலைநயத்துடன் ரசிகர்கள் சிறந்த போஸ்டரை வடிவமைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இதில் சிறந்த போஸ்டர் தேர்வு செய்யப்பட்டு, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், நயன்தாரா, அனிருத், லைகா பிரம்மாண்ட கூட்டணியில் “தர்பார்”

இந்த “தர்பார்“ படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்  167 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.


 ‘2.0’  எனும் பிரமாண்ட படத்தை தயாரித்த  தயாரிப்பு நிறுவனமான  லைகா ப்ரொடக்௸ன்ஸ்  இப்படத்தை தயாரிக்கிறது. 2.0  படத்திற்கு  பிறகு  சூப்பர்ஸ்டார்  ரஜினியோடு  லைகா  நிறுவனம்  இணையும்  இரண்டாவது படம் இது.பல வெற்றி படங்களை கொடுத்து லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கபடும்  நயன்தாரா நடிக்கும்  புதிய படம்  இது . சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு நயன்தாரா மூன்று  படங்களில் நடித்து   11 வருடங்களுக்கு பிறகு  மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளார். கோ கோ படத்தை அடுத்து நயன்தாரா லைகா  நிறுவனம் இணையும் இரண்டாவது படம் இது . மேலும் இப்படத்தில் அனி௫த் இசையமைக்கிறார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அனி௫த் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். தளபதி விஜய் நடித்து  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி  லைகா  புரொடக்௸ன்ஸ் தயாரித்த கத்தி படத்திற்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸுடன் அனி௫த்  இரண்டாவது முறையாக இணைத்துள்ளார்.இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் 28 ஆண்டுகளுக்கு பிறகு  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு “தர்பார்” படத்தில் சேர்ந்து பணியாற்றுவது  இரண்டாவது முறையாகும். 

அதே போல் ஏ.ஆர் முருகதாஸுடன் இரண்டு படங்களில்  கூட்டணி அமைத்த சந்தோஷ் சிவன் மூன்றாவது முறையாக ஏ.ஆர். முருகதாஸ் அவர்களுடன் இப்போது இணைத்துள்ளார்.


darbar# rajini darbar# mass dharbar# mumbai darbar# super star darbar# darbar 2019# darbar film# mega hit darbar# rajinikanth darbar still# cini news# tamil live news# live news# rajini 167th film darbar

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.