டி.டி.வி தினகரனுக்கு ஆர்.கே நகர் மக்கள் கருப்பு கொடி!

டி.டி.வி தினகரனுக்கு ஆர்.கே நகர் மக்கள் கருப்பு கொடி!    


தொகுதிக்கு வந்த, எம்.எல்.ஏ., தினகரனுக்கு, பொது மக்கள் கறுப்பு கொடி காட்டினர்.சென்னை, தண்டையார்பேட்டை, பெரியபாளையத்தம்மன் கோவிலில், 92வது ஆடி திருவிழா, நேற்று நடந்தது. 


இதில், ஆர்.கே.நகர் தொகுதி, எம்.எல்.ஏ., தினகரன், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்தார்.காசிமேடு, ஜீவரத்தினம் சாலை வழியாக, காரில் வந்த தினகரனுக்கு எதிராக, 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, கறுப்பு கொடி காட்டி, எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

பிரச்னை ஏற்படாமல் தடுக்க, 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.


இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:

தொகுதி, எம்.எல்.ஏ.,வான தினகரன், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இலவச வீடு, சாலை வசதி, குடிநீர், பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. தொகுதிக்கும் வருவதில்லை; மக்கள் பிரச்னைகளையும் கண்டுகொள்ளவில்லை. எனவே, அவர் எப்போது தொகுதிக்கு வந்தாலும், கறுப்பு கொடி காட்டுவோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மக்களின் எதிர்ப்பை அடுத்து, தினகரன், கோவில் திருவிழாவில், சிறிது நேரம் பங்கேற்று கிளம்பினார்.ttv dhinagaran in rk nagar# rk nagar peoples angry with ttv# ttv in tondiarpet# ttv vs rk nagar# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.