ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க அனுமதி

ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க அனுமதி


ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை  5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்றிரவு டெல்லி ஜோர் பாக்கில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கைது செய்தனர். காங்கிரஸ் தொண்டர்களின் மறியலையும் மீறி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

ஜோர் பாக்கில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் லோதிசாலையில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு சிதம்பரத்தை அழைத்து வந்த அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார். 

கடந்த 2011 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் என்ற முறையில் சிபிஐ தலைமை அலுவலக கட்டிட திறப்பு விழாவில் சிதம்பரம் பங்கேற்றார். அவர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்ட அதே கட்டிடத்தில் வைத்தே சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் இரவெல்லாம் விசாரணை நடத்தினார்.

காலையிலும் அவரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் மதியம் 2.30 மணி அளவில், ப.சிதம்பரத்தை, டெல்லி ரோஸ் அவின்யூவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர் படுத்தினர். அப்போது சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் நீதிபதி அஜய் குமார் குகாரிடம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பிணையில் வெளிவர முடியாத பிடியாணையில் பேரில் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுடன் இணைந்து சிதம்பரம் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
விசாரணைக்கு சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்ற அவர், அமைதி காக்க ஒருவருக்கு அரசியல் சட்டம் அனுமதி அளித்தாலும் கூட, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதை ஏற்க முடியாது என்றார். பண பரிமாற்ற மோசடி நடைபெற்று உள்ள நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு முந்தைய நிலையில் வழக்கு உள்ளதாக கூறிய அவர், வழக்கில் இதுவரை வெளிவராத பல தகவல்கள் சிதம்பரத்திடம் உள்ளன என்றார்.
இதன் பின்னர் வாதிட்ட சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கில் முக்கியமானவராக குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், அவரது கணக்கு தணிக்கையாளர் பாஸ்கர் ராமன், மற்றும் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
சிதம்பரம் எந்த நிலையிலும் விசாரணையை புறக்கணிக்கவில்லை என்ற அவர், நேற்றிரவு 12 மணி வரை சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்கவே இல்லை என்றார். இதன் பின்னர் வெறும் 12 கேள்விகளை மட்டுமே கேட்டுள்ளதாகவும், சிபிஐ விசாரணைக்கு தயார் நிலையில் இல்லை என்றும் அவர் கூறினார். அப்போது குறுக்கிட்ட சிதம்பரம் கடந்த 24 மணி நேரமாக உறங்க அனுமதி அளிக்கப்படவில்லை என்றார்.
இதன் பின்னர் வாதிட்ட சிதம்பரத்தின் மற்றொரு வழக்கறிஞரான அபிசேக் மனு சிங்வி, சிபிஐ எதிர்பார்க்கும் பதிலை சொல்லாதது ஒத்துழையாமை இல்லை என்றார். விசாரணைக்கு சிபிஐ அழைத்த போது சிதம்பரம் சென்றதை அவர் சுட்டிக்காட்டினார். அரசு தரப்பு சாட்சியான இந்திராணியின் வாக்குமூலம் ஒரு ஆவணமே தவிர சாட்சி அல்ல என்று அவர் வாதிட்டார். அப்போது தான் பேச விரும்புவதாக சிதம்பரம் கூறிய போது, துஷார் மேத்தா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
இரு வழக்கறிஞர்கள் வாதிடும் போது, சிதம்பரம் ஏன் தனியாக வாதிட வேண்டுமென அவர் கேள்வி எழுப்பினார். புத்திசாலி தனத்தை பயன்படுத்தி, விசாரணைக்கு ஒத்துழைக்க சிதம்பரம் மறுப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
சிதம்பரத்திடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெற சிபிஐ வலியுறுத்தவில்லை என்றும், வழக்கின் மூலவேரை கண்டு பிடிக்கவே விசாரணை நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார்.
இதன் பின்னர் பேசிய சிதம்பரம், சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு தாம் பதில் அளித்துள்ளதாக கூறினார். வெளிநாட்டில் வங்கி கணக்கு உள்ளதா என்ற கேள்விக்கு இல்லை என்றும், கார்திக்கு வெளிநாட்டு வங்கியில் கணக்கு உள்ளதா என்ற கேள்விக்கு ஆம் என்றும் பதில் கூறியதாக அவர் தெரிவித்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் இரு தரப்பும் வாதிட்ட நிலையில் நீதிபதி அஜய் குமார் குகார் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
மாலை 5.02 மணிக்கு வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் மாலை 6.37 மணிக்கு தீர்ப்பு அளித்த நீதிபதி துஷார் மேத்தா, வருகிற 26-ஆம் தேதி வரை சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தார். தினமும் அரை மணிநேரம், குடும்பத்தினரும், வழக்கறிஞர்களும் சிதம்பரத்தை சந்தித்து பேசலாம் என நீதிபதி கூறினார்.
இதையடுத்து நீதிமன்ற அறையிலேயே சிதம்பரத்திற்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதன் பின்னர் அவரை, டெல்லி லோதி சாலையில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே முன்ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.
p.chithambaram in court# p.chithambaram in CBI investigation# p.chithambaram minister# p.chithambaram arrested# p.chithambaram# tamil live news# live news# p.chithambaram  court order# p.chithambaram  vs court

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.