லோக்சபா தேர்தல்:தி.மு.க. வெற்றி:தொண்டர்கள் குத்தாட்டம்

லோக்சபா தேர்தல்:தி.மு.க. வெற்றி:தொண்டர்கள் குத்தாட்டம் 


வேலூர்: 

வேலூர் லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 8,141ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

இறுதிச்சுற்றில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4, 85,340 ஓட்டுகளும், அதிமுக வை சேர்ந்த ஏ.சி.சண்முகம் 4, 77,199 ஓட்டுகளும் , நாம்தமிழர் கட்சியை சேர்ந்த சேர்ந்த வேட்பாளருக்கு 26,995 ஓட்டுக்கள் கிடைத்தது. 

வேலுார் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில், புதிய நீதிக் கட்சி தலைவர், சண்முகம், தி.மு.க., சார்பில் கதிர் ஆனந்த் உள்ளிட்ட, 28 பேர் போட்டியிட்டனர்.கடந்த, 5ம் தேதி, ஓட்டுப்பதிவு நடந்தது. 

மொத்தம், 71.51 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. பதிவான ஓட்டுகள், எண்ணும் பணி சட்டசபை தொகுதி வாரியாக, இன்று காலை, 8:00 மணிக்கு, துவங்கியது. முதலில், தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.ஓட்டு எண்ணும் மையத்தில், மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில், 1,073 போலீசார்; 100 துணை ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். முதலில், தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது .

 கதிர் ஆனந்த் 8,141ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

இந்த வெற்றி சாதாரண வெற்றி அல்ல. ஸ்டாலினுக்கு கிடைத்த மேலும் ஒரு அங்கீகாரம் என துரைமுருகன் கூறினார்.

இந்த வெற்றியை திமுக வினர் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
vellore lok sabha dmk win# vellore election dmk win# dmk win# dmk fans dance# dmk stalin# vellore dmk# tamil live news# live news 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.