நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் நீட்டிப்பு- உயர் நீதிமன்றம்

நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் நீட்டிப்பு- உயர் நீதிமன்றம்  


நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் தங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்றும் தபால் வாக்குகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்த நிலையில் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு தேர்தலை நடத்தியது செல்லாது என அறிவிக்க கோரியும் பெஞ்சமின் மற்றும் ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்தது. இந்த வழக்கு நீதிபதி ஆர். சுப்ரமணியன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடிகர் சங்க முன்னாள் தலைவர் நாசர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நடிகர் சங்க கட்டட கட்டுமான பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், இதுவரை அதற்காக 30 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தபால் வாக்குகள் 7 நாட்களுக்கு முன்னரே அனுப்பி வைக்கப்பட்டதாகவும், 90 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும், இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனவும் மனுதாரர் பெஞ்சமினுக்கு தாமதமாக தபால் வாக்கு சென்றது விபத்து என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலம் ஏப்ரல் 18ஆம் தேதி முடிவடைந்தது. ஆனால், நிர்வாகிகள் படப்பிடிப்பிற்காக வெளியூர்களில் இருந்ததால் 10 நாட்கள் காலதாமதமாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றதாகவும், முறையாக விதிகளை பின்பற்றி தான் தேர்தல் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நடிகர் சங்க தேர்தல் முடிவுளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்த நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். 


high court# high court in chennai# nadigar sangam announcement date# nadigar sangam# actor nasar# vishal nadigar sangam# tamil live news# live news


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.