இந்திய அணி கோப்பையை வென்றது: ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்திய அணி கோப்பையை வென்றது: ரசிகர்கள் மகிழ்ச்சி  


கயானா: விண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி 'டுவென்டி-20' போட்டியில் கேப்டன் கோஹ்லி, ரிஷாப் அரை சதம் விளாச, இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, 3-0 என கோப்பை கைப்பற்றியது.

விண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்தன. 

இதில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என தொடரை ஏற்கனவே கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி 'டுவென்டி-20' போட்டி விண்டீசின் கயானா புரோவிடன்ஸ் மைதானத்தில் நடந்தது. மழை காரணமாக 1 மணி நேரம், 15 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது. 

'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி 'பீல்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணி துணைக் கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜா, கலீல் அகமதுவுக்குப் பதில் லோகேஷ் ராகுல், தீபக் சகார், அறிமுக வீரராக ராகுல் சகார் களமிறங்கினார்.

விண்டீஸ் அணிக்கு எவின் லீவிஸ், சுனில் நரைன் ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. தீபக் சகார் வீசிய போட்டியின் 2வது ஓவரில் சுனில் நரைன் (2) சிக்கினார். மீண்டும் மிரட்டிய தீபக் சகார், முதல் பந்தில் லீவிஸ் (10), 5வது பந்தில் ஹெட்மயரை (1) வெளியேற்றினார். சிக்சர் மழை பொழிந்த போலார்டு, அரைசதம் அடித்தார். பூரன் 17 ரன் எடுத்தார். 


போலார்டு (58) போல்டானார். பிராத்வைட் 10 ரன் எடுத்தார். விண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது. பாவெல் (32), பேபியன் ஆலன் (8) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக தீபக் சகார் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இந்திய அணிக்கு தவான் (3), லோகேஷ் ராகுல் (20) ஏமாற்றினர். கேப்டன் கோஹ்லி, ரிஷாப் அபாரமாக விளையாடினர். எதிரணி பந்துவீச்சை சிதறடித்த இருவரும் அரை சதம் அடித்தனர். 

இவர்களின் பங்களிப்பு கைகொடுக்க வெற்றி எளிதானது. கோஹ்லி 59 ரன்களில் அவுட்டானார். ரிஷாப் சிக்சர் விளாச, இந்திய அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஷாப் (65), மணிஷ் பாண்டே (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

india win cup 2019# india team win# tamil live news# live news# cricket news live# 


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.