நிதியை பயன்படுத்த தவறிவிட்டது- C.A.G

 நிதியை பயன்படுத்த தவறிவிட்டது- C.A.G


தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள், கடந்த 5 ஆண்டுகளில், ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பயன்படுத்த தவறிவிட்டதாக, மத்திய கணக்குத் தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2013ஆம் ஆண்டு முதல், 2018ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில், இவ்வாறு நிதியை கையாள்வதில் தேக்கநிலை ஏற்பட்டதாகவும், சி.ஏ.ஜி அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
கடந்த 5 ஆண்டு காலத்தில், மொத்தமாக, 10 லட்சத்து 12 ஆயிரத்து 893 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதில், 8 லட்சத்து 91 ஆயிரத்து 821 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாகவும், ஆண்டுடொன்றுக்கு 24 ஆயிரத்து 502 கோடி வீதம், 5 ஆண்டுகளில், மொத்தம் ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய் நிதி, திரும்ப ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், சி.ஏ.ஜி அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
அதிகபட்சமாக கடந்த 2017-2018ஆம் ஆண்டு 28 ஆயிரத்து 29 கோடி ரூபாய் நிதியை, தமிழ்நாடு அரசு, திரும்ப ஒப்படைத்திருப்பதாகவும், சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

CAG press release copy# tn government cag# CAG# CAG Department# cag tamil nadu government# cag vs tn govt# tamil live news# live news# secretariat chennai

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.