இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு மாணவர்கள் வர கூடாது- DPI

இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு  மாணவர்கள் வர கூடாது- DPI

இருசக்கர மோட்டார் வாகனங்களை ஓட்டி வரும்  மாணவர்களை, பள்ளிக்குள் அனுமதிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சாலை பாதுகாப்பு விதிகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்றுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 
அதில் பள்ளிகளுக்கு இருசக்கர மோட்டார் வாகனங்களில் வரும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இறைவணக்க கூட்டத்தின் போது சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி முடிந்து அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் அனுப்புவதால் தான், மாணவர்கள் பேருந்தில் தொங்கிய படி பயணிக்கின்றனர் எனவும், எனவே 15 நிமிட இடைவெளியில் மாணவர்களை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிக்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்களில் உடற்கல்வி ஆசிரியர்கள் ஒரு மணி நேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வி துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து பள்ளிகளிலும் சாலை பாதுகாப்பு மன்றங்களை துவக்கி, அதில் மாணவர்களை சேர்த்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
DPI# school students without byke in school# dpi news# school boys no byke# tamil live news# live news


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.