ஒரே மாதத்தில் 25 ரவுடிகள் புளியந்தோப்பில் கைது

ஒரே மாதத்தில் 25 ரவுடிகள் புளியந்தோப்பில் கைது


சென்னை:
சென்னை புளியந்தோப்பில் ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் 25 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
புளியந்தோப்பில் போலீஸ் நிலைய சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக கிருஷ்ண மூர்த்தி பொறுப்பேற்ற பின்னர், ரவுடிகள் வேட்டையை தீவிரப்படுத்தியதுடன் கஞ்சா வியாபாரிகளையும் கைது செய்து வருகிறார். புளியந்தோப்பு பி.கே.காலனியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.
இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி பரிந்துரை செய்தார். இதனை ஏற்று கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கஞ்சா வியாபாரி ஆனந்தனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
குபேந்திரன், அபிஷேக் ஆகிய குற்றவாளிகள் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதுதவிர புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கில்பட் ரவி, கருப்பா, சுரேஷ் உள்ளிட்ட மேலும் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மீதும் விரைவில் குண்டர் சட்டம் பாய்கிறது. இதன்மூலம் ஒரே மாதத்தில் 8 பேர் வரையில் குண்டர் சட்டத்தில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராஜேஷ், பார்த்திபன் ஆகிய 2 பேரும் கைது செய்யப் பட்டனர்.
இவர்களிடம் இருந்த 2 ஆட்டோக்கள், 3 செல் போன்கள், 1 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக ஆட்டோவில் தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதும், போலீசார் அவர்களை பிடிப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.