சிதம்பரம் 7 ம் எண் சிறையில் அடைப்பு: சலுகையா? இல்லையா??

சிதம்பரம் 7 ம் எண் சிறையில் அடைப்பு: சலுகையா? இல்லையா??  


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த காங்., ஐ சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை செப்.,19 ம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


திகார் சிறையில் சிதம்பரம், 7 ம் எண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை எண் 7 ல் 600 முதல் 700 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களுக்கான எதிரான குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள். 

இந்த சிறையில் உள்ள தனி அறைக்குள் இருக்கும் தான் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார். பொதுவாக இந்த அறை பொருளாதார குற்றம் புரிந்தவர்கள் அடைக்கப்படுவது. இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக சிசிடிவி கேமிரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறார் சிதம்பரம்.


                      சிதம்பரத்திற்கு சலுகை :


கோர்ட்டில் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் கேட்டுக் கொண்டதன் பேரில் இசட் தர பாதுகாப்பு, தனி அறை, கட்டில், வெஸ்டன் ஸ்டைல் கழிப்பறை, மருந்துகள் வைத்துக் கொள்ள கோர்ட் அனுமதி அளித்துள்ளது. முதல் நாள் இரவான நேற்று (செப்.,05) சிதம்பரத்திற்கு காய்கறிகள் மற்றும் பருப்புடன் ரொட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதை சாப்பிட சிதம்பரம் மறுதஅது விட்டதாக கூறப்படுகிறது. சிறை கேன்டீனில் இருந்தும் அவர் உணவுகளை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற கைதிகளைப் போல் அதிகாலை பிரார்த்தனையில் கலந்து கொள்ளவும் சிதம்பரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


                சிதம்பரமும் சாதாரண கைதியே :
சிறையில் சிதம்பரத்திற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் கோயலிடம் கேட்ட போது, யாராக இருந்தாலும் சிறை, சிறை தான். கோர்ட் உத்தரவுகளை மட்டும் நாங்கள் கடைபிடிக்கிறோம். சிறையில் யாருக்கும் தனிகவனிப்பு கிடையாது. சாதாரண மற்ற கைதிகளை போலவே சிதம்பரமும் நடத்தப்படுவார் என்றார்.

கடந்த 15 நாட்களாக சிபிஐ தலைமை அலுவலக விருந்தினர் அறையில் வைத்து விசாரிக்கப்பட்ட சிதம்பரத்திடம் 90 மணி நேரத்தில் 400 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் சிதம்பரம் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.


           தமிழ் காவலர்களுக்கு அனுமதியில்லை :

சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் தமிழகத்தை சேர்ந்த காவலர் யாருக்கும் பாதுகாப்பு பணி வழங்கப்படவில்லை. மொழிவாரி சலுகை வழங்கப்படுவதாக பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் இருக்கும் தனி அறையில் பாதுகாப்பு பணியில் பெரும்பாலும் வடமாநிலத்தவர்களே காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.