9-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு!

9-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு! சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
சென்னை உள்பட வட மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மாலை நேரங்களில் மழை பெய்கிறது.
தற்போது 9-ந்தேதி அன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இது குறித்து வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-
வளி மண்டல மேலடுக்கில் ஏற்பட்ட காற்றின் குவியல், தென்மேற்கு பருவக் காற்றின் சாதகமான போக்கு ஆகியவற்றால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது.
காற்றின் போக்கில் மேக கூட்டங்கள் திரண்டு வருவதால் வருகிற 9-ந்தேதி (திங்கட்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் மத்திய மற்றும் அதையொட்டிய தெற்கு வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.