பல் வலி மாத்திரையில் இரும்பு கம்பி!

பல் வலி மாத்திரையில் இரும்பு கம்பி! 


கோவை:

கோவை கரும்புக்கடையை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 24). வியாபாரி.
இவருக்கு இன்று காலை பல் வலி ஏற்பட்டது. இதற்காக அந்த பகுதியில் உள்ள மெடிக்கல் கடைக்கு சென்று பல் வலிக்கு மாத்திரைகள் வாங்கினார்.
பின்னர் வீட்டுக்கு சென்ற முஸ்தபா மாத்திரையை பிரித்து சாப்பிட முயன்றார். அப்போது மாத்திரையின் நடுவில் இரும்பு கம்பி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். 
பின்னர் மெடிக்கல் கடைகாரரிடம் சென்று நீங்கள் கொடுத்த மாத்திரையில் இரும்பு கம்பி இருப்பதாக கூறினார். அவர் சம்பந்தப்பட்ட மருந்து கம்பெனிக்கு இது குறித்து புகார் தெரிவிப்பதாக கூறி உள்ளார்.
மாத்திரையில் இரும்பு கம்பி இருந்த தகவல் அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவியது. 
இதனையடுத்து முஸ்தபாவின் உறவினர், நண்பர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் மெடிக்கல் கடை முன்பு திரண்டு உள்ளனர்.
வலிக்கு வாங்கிய மாத்திரையில் இரும்பு கம்பி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.