பேராசை பெருநஷ்டம்!

பேராசை பெருநஷ்டம்! 

சர்வதேச பண நிதியத்தில்  78 கோடி ரூபாய் இருப்பதாக மின்னஞ்சலில் ஆசை வார்த்தை கூறி, 42 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்களை, புதுச்சேரி இணைய குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த 36 வயதான அன்மோல் ஜெயின் என்பவர், ஒரு பொறியியல் பட்டதாரி. அரவிந்தர் ஆசிரமத்தில் பணியாற்றி வரும் அவரது மின்னஞ்சல் முகவரிக்கு கடந்த மே மாதம் 19ஆம் தேதி அன்று ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது.
அதில், தங்கள் பெயரில் அமெரிக்காவில் உள்ள சர்வதேச பண நிதியத்தில் 78 கோடி ரூபாய் இருப்பதாகவும், அந்தப் பணத்தை தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்ற உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே பெடரல் வங்கியில் பணிபுரியும் ரூஸ் தயார் மற்றும் ரிசர்வ் வங்கி அலுவலர் அசோக் பாண்டே என மின்னஞ்சல்லில் அறிமுகமான மோசடி நபர்களை அன்மோல் ஜெயின், நம்பியுள்ளார். 
தொலைபேசி வாயிலாகவும் அவர்கள் இடையே தகவல் தொடர்பு இருந்தது.
பணத்தை மாற்றுவதற்கு பல லட்சங்கள் செலவாகும் என்று கூறிய அந்த நபர்கள், பணம் கைமாறிய பிறகு கமிஷன் தொகை கொடுத்தால் போதும் என்று நல்லவர்கள் போல் நடித்துள்ளனர்.
சில மாதங்கள் கழித்து வந்த ஒரு மின்னஞ்சலில் தற்போது வரை 42 லட்சம் ரூபாய் செலவாகி இருப்பதாகவும், அதை அனுப்பினால் 78 கோடி ரூபாய் கைமாறி விடும் என்று மோசடி நபர்கள் கூறவே, அன்மோல் ஜெயினும் பணம் அணுப்பியுள்ளார்.
ஆனால் பணம் அனுப்பிய பிறகு மோசடி நபர்களிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லாமல், அலைக்கழிக்கப்படவே தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அன்மோல் ஜெயின் சிபிசிஐடியில் புகார் கொடுத்தார்.
ஆனால் இது இணையதளம் மூலம் நிகழ்த்தப்பட்ட குற்றம் என்பதால் இணைய குற்றத்தடுப்பு பிரிவில் புகார் அளிக்க சிபிசிஐடி அதிகாரிகள் அறிவுறுத்தியதால் சம்பந்தப்பட்ட பிரிவில் அவர் புகார் அளித்தார். 
அந்தப் புகாரின் பேரில் மோசடி நபர்களை இணைய குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
panam mosadi# mosadi gummal# puthuchery police investigation# online fake# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.