கைக்குட்டை கூட கருப்பு நிறத்தில் இருக்க கூடாது!

கைக்குட்டை கூட கருப்பு நிறத்தில்  இருக்க கூடாது! ஆக்ரா:
பிரதமர் நரேந்திரமோடி உத்தரபிரதேச மாநிலம் மதுராவுக்கு நாளை செல்கிறார்.
விவசாயத்துக்கு பலன் அளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். அதோடு வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.
இந்தநிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கருப்பு உடைகளுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 
கைக்குட்டை, டவல் போன்ற துணிகளையும் கருப்பு கலரில் கொண்டு வரக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள், பிளாஸ்டிக் மற்றும் பேக்குகள் நிகழ்ச்சியில் கொண்டுவர தடை விதிக்கப்பட்டு உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வசுந்தராஜே இங்கு வந்தபோது அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தப்பட்டது. அதோடு கோ‌ஷமும் போடப்பட்டது.
அதேபோன்று மோடிக்கு எதிராக நடந்துவிடக் கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகம் கூடுதல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.