சரத் பவார் மீது வழக்குப்பதிவு : ராகுல் கோபம்!

சரத் பவார் மீது வழக்குப்பதிவு : ராகுல் கோபம்! 


புதுடில்லி : 

சரத் பவார் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என காங்., எம்.பி., ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.

கூட்டுறவு வங்கிக் கடனில் மோசடி செய்ததாக தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 


ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் ஏதும் அனுப்பாத நிலையில், இப்போது வர வேண்டாம் என கூறியும், தானாக சென்று இன்று ஆஜராக உள்ளதாக சரத் பவார் அறிவித்திருந்தார். ஆனால், அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில், சரத் பவார் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து டுவிட்டரில் ராகுல் கருத்து பதிவிட்டுள்ளார்.


அதில், எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்கும் மத்திய அரசின் நடவடிக்கையில் தற்போது சரத் பவார் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


மகாராஷ்டிரா தேர்தல் அடுத்த மாதம் நடக்க உள்ள நிலையில் சரத் பவார் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது அரசியல் சந்தர்ப்பவாதம். இவ்வாறு ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பணிகளில் தான் பிஸியாவதற்கு முன்பாக சென்று அமலாக்கத்துறை முன் ஆஜராக உள்ளதாக கூறி சரத் பவார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.