பிக்பாஸ் மீது மதுமிதா காவல் நிலையத்தில் புகார்

பிக்பாஸ் மீது மதுமிதா காவல் நிலையத்தில் புகார் 


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்‌ஷி, அபிராமி உள்ளிட்ட போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். 

இதற்கிடையில் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி திடீரென வெளியேற்றப்பட்டார். 

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி சட்டப்பிரிவு மேலாளர், நடிகை மதுமிதா மீது சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதில் மதுமிதா ஒப்பந்தப்படி 11 லட்சத்தி, 50 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள 42 நாட்களுக்கு பாக்கி பணம் தருவதாக கூறி இருந்ததாகவும் ஆனால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை மதுமிதா தொடர்பு கொண்டு இரண்டு நாட்களில் பணம் தரவில்லை என்றால் தற்கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக புகார் மனுவில் கூறியிருந்தார்.

இதற்கு மதுமிதா, நான் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் தற்கொலை மிரட்டல் கொடுக்கவில்லை. என் மீது பொய் புகார் கொடுத்திருக்கிறார்கள் என்று மறுப்பு தெரிவித்தார். 

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா நாசரேத் பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

மேலும் அந்த புகாரில் போட்டியாளர்கள் கொடுமைப்படுத்தியதை தொகுப்பாளர் கமலும் கண்டிக்கவில்லை. தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 56வது நாளில் வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பியதாக அந்த புகாரில் கூறியுள்ளார்.

big boss mathumitha# big boss mathumitha police complaint# big boss mathumitha crying# big boss mathumitha complaint about big boss# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.