பிரதமர் மோடிக்கு "பில்கேட்ஸ் அறக்கட்டளை" விருது

பிரதமர் மோடிக்கு "பில்கேட்ஸ் அறக்கட்டளை" விருது


நியூயார்க்:


பிரதமர் மோடி, இந்தியாவில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.


இந்த திட்டத்தின்படி, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி நாட்டில் தூய்மை பாதுகாப்பை அடைவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

இந்த திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 9 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 98 சதவீத கிராமங்களில் கிராமப்புற சுகாதார பாதுகாப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.


இந்த சாதனைக்காக பிரதமர் மோடிக்கு புகழ் பெற்ற அமெரிக்க தொழில் அதிபர் பில்கேட்ஸ், மெலிந்தா அறக்கட்டளையின் ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வரும் 24-ந் தேதி நடக்கிற விழாவில் இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது.


Labels:

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.