சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் விரைவில் மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைக் கவுரவிக்கும் வகையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழா நடத்தப்பட்டு வருகிறது. 
அந்த வகையில், சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.
மாணவர் சேர்க்கை, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், புதுமையாக கற்பித்தல் என பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.
டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது, 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், 36.5 கிராம் எடையுள்ள வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டதாகும். இந்த விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் வளர்மதி, சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
விருதுகளை வழங்கிப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 90ஆயிரம் பள்ளிகளில் விரைவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என்றார்.
அறிவார்ந்த சிந்தனையோடும், கூட்டு முயற்சியோடும் ஆசிரியர்கள் பணிகளை மேற்கொண்டால் ஃபின்லாந்து நாட்டை விட தமிழகம் கல்வியில் முன்னோடியாக திகழும் என அவர் குறிப்பிட்டார். ஆசிரியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அரசு உணர்ந்திருக்கிறது என்று கூறிய அமைச்சர், 
ஆசிரியர்களின் மனித நேயம் நாட்டையே மாற்றிக்காட்டும் எனக் குறிப்பிட்டார். இன்றைய கால கட்டத்தில் மாணவர்களை சத்தம் போட்டுக்கூட கண்டிக்க முடியாத இடர்பாட்டினை ஆசிரியர்கள் சந்திக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
தனியார் பள்ளிகள், சரியாக பயிலாத மாணவர்களுக்கு டி.சி. கொடுத்து அனுப்புகின்றன என்றும், அப்படிப்பட்ட மாணவர்களையும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்சி பெற வைக்கிறார்கள் என்றும் அவர் பெருமையோடு குறிப்பிட்டார்.
முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்று, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் விரைவில் மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.dr.radha krishnan award# 2019 dr.radha krishnan award# dr.radha krishnan award giving minister sengotaiyan# dr.radha krishnan award function# tamil live news# live news# dr.radha krishnan award minister jaya kumar


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.