டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது: எப்படி?!


டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது: எப்படி?!  


டெங்குவால் ஏற்படும் உயிர் இழப்பை தடுக்க சுகாதாரத்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது. கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆனாலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். 

அவர் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் உற்பத்தியாகக்கூடியது. 3 வாரங்கள் உயிர் வாழும் இந்த கொசுக்கள் நல்ல தண்ணீரில் நூற்றுக்கணக்கான முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்கிறது. இந்த கொசுக்கள் பகலில் கடிக்கும் தன்மையுடையது.

டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடியது. டயர், பயன்படுத்தாத உடைந்த சிமெண்ட் தொட்டிகள், நீண்ட காலமாக கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கும் நீரில் உருவாகும் ஏடிஸ் கொசுக்கள் டெங்கு வைரசுடன் உருவாகிறது. இந்த கொசுக்கள் கடிக்கும் போது டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.

டெங்கு காய்ச்சல் உள்ளவரை கடித்த ஏடிஸ் கொசு ஆரோக்கியமானவர்களை கடிக்கும் போது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது.

காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்புவலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். ரத்த தட்டு அணுக்கள் ரத்தம் உறைவதற்கு மிக முக்கியமான காரணியாகும். டெங்கு வைரஸ் ரத்தத் தட்டு அணுக்களை அழித்து விடும் தன்மை உடையது. 

ரத்த தட்டுக்கள் எண்ணிக்கை குறையும் போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்த கூடும். உரிய மருத்துவ சிகிச்சை பெறவில்லை என்றால் உயிர் இழப்புக்கூட நேரிடலாம்.

சாதாரணமாக ஏற்படும் சளி, காய்ச்சல் தானாக ஓரிரு நாட்களில் குணமாகிவிடும். ஆனால் மலேரியா, எலி காய்ச்சல், டெங்கு, டைபாய்டு காய்ச்சலுக்கு உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சை தாமதமானாலோ, சுயமாக மருந்துகள் சாப்பிட்டாலோ, போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றாலோ உடல் நலம் கடுமையாக பாதிக்க நேரிடும்.

எனவே காய்ச்சல் கண்டவுடன் மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.

உரிய சிகிச்சையும், முறையான கவனிப்பும் இருந்தால் டெங்கு காய்ச்சலை எளிதாக குணப்படுத்தலாம். டெங்கு காய்ச்சல் உடலில் நீர் சத்தை குறைத்துவிடும். உப்பு சேர்த்த கஞ்சி, இளநீர் மற்றும் மருத்துவமனையில் கொடுக்கப்படும் உயிர் காக்கும் ஓ.ஆர்.எஸ். போன்ற நீராகாரம் தேவையான அளவு கொடுக்க வேண்டும்.

காய்ச்சல் நின்ற பிறகு 3 நாட்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்கவில்லை என்றாலோ, சோர்வாக இருந்தாலோ மீண்டும் மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சலை குணப்படுத்தவும், தடுக்கவும் நிலவேம்பு குடிநீர், மலைவேம்பு இலைச்சாறு மற்றும் பப்பாளி இலைச்சாறு ஆகிய சித்த மருந்துகளை பயன்படுத்தலாம். 

டெங்கு காய்ச்சலை தடுக்க ஏடிஸ் கொசு உருவாகும் தேவையற்ற பொருட்களை அகற்றிடுவோம். பகலிலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைப்போம். 

தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு நன்றாக தேய்த்து கழுவி கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து டெங்குவை ஒழிப்போம்.
Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.