சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் 

சென்னையில் பேனர் விழுந்து விபத்தில் சிக்கி பலியான சுபஸ்ரீயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். 
சென்னை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ, கடந்த வியாழக்கிழமை அன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பேனர் சரிந்து விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். 
அப்போது அவர் மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். பேனர் வைத்த அரசியல் கட்சி பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் இன்று சுபஸ்ரீயின் இல்லத்திற்குச் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சுபஸ்ரீக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் சுபஸ்ரீயின் தாய் தந்தைக்கு ஸ்டாலின் அறுதல் கூறினார். திமுக சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி உதவிக்கான காசோலையையும் வழங்கினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்:
பேனர் கலாச்சாரமே இருக்க கூடாது என்றார். நினைத்தால் ஜெயகோபாலை உடனே கைது செய்து விட முடியும் எனக் கூறிய ஸ்டாலின், இப்பிரச்சனையை அரசியலாக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார். 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.