சபரிமலை கோயிலில் இனி இப்படியா?!

சபரிமலை கோயிலில் இனி இப்படியா?! திருவனந்தபுரம்: 

சபரிமலை கோயிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆலோசிப்பதாக சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் பந்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் நுழைய மாநில அரசு தடை விதித்திருந்தது. 

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயதுடைய பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என கடந்த ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது. ஆனாலும் இந்த உத்தரவை மாநில அரசு ஏற்க மறுத்தது.


சபரிமலை கோவிலில் நுழைய முயன்ற பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த டிசம்.,- ஜன., மாதங்களில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களும் நடந்தது. ஆண் வேடமிட்டு நுழைய முயன்ற பெண்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் பல போராட்டங்களால் சபரிமலை பகுதியில் பரபரப்பு நிலவியது.


இந்நிலையில் சபரிமலை கோவிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவிலின் நிர்வாகத்திலும் மாற்றம் கொண்டுவரவும் ஆலோதனை நடக்கிறது. இவ்வாறு சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு தெரிவித்துள்ளத. இதுகுறித்த தகவலை சுப்ரீம்கோர்ட்டும் வெளியிட்டுள்ளது.

மேலும் மண்டலபூஜை, மகரவிளக்கு விழாவிற்காக சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், தலைமை செயலாளர், திருவிதாங்கர் தேவசம்பர்டு தலைவர் மற்றும் பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகளவிலான குடிநீர் தொட்டிகள் மற்றும் கழிவறைகள் கட்டப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Labels:

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.