முஹர்ரம் பேரணி: தொடர் உயிரிழப்பு

முஹர்ரம் பேரணி: தொடர் உயிரிழப்பு 
பாக்தாத்:


உலக நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் ஷியா, சன்னி என இரண்டு பிரிவினராக உள்ளனர்.  கி.பி.680-ம் ஆண்டு கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி (முஹர்ரம் பிறையின் பத்தாம் நாள்) கொல்லப்பட்டதை ஷியா பிரிவினர் ஆஷுரா துக்க நாளாக கடைப்பிடிக்கின்றனர்.


இந்த போர் நடந்த இடம் தற்போதைய ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கர்பலா நகரம் என்றழைக்கப்படும் இந்த நகரம் முஹம்மது பிறந்த மக்கா நகருக்கு அடுத்தபடியாக இஸ்லாமிய மக்களின் இரண்டாவது புனித்தலமாக அறியப்படுகிறது.

முஹரம் தினமான இன்று கர்பலா நகரில் பல்லாயிரம் மக்கள் பங்கேற்ற மாபெரும் ஆஷுரா பேரணி நடைபெற்றது. இதில் பண்டைக்காலத்து போர் வீரர்களை போல் உடைகளை அணிந்து பலர் குதிரைகளின் மீது அமர்ந்து பவணி வந்தனர்.


இந்த பேரணியில் வந்த ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும் கூட்டத்தில் மிதிபட்டு நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


Labels:

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.