தங்கம் விலை மேலும் குறைவு

தங்கம் விலை மேலும் குறைவு 

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், இன்றும் சவரனுக்கு 128 ரூபாய் குறைந்துள்ளது. 
தங்கம் விலை கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து அதிகரித்து பல்வேறு புதிய உச்சங்களையும் எட்டியது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 30 ஆயிரம் ரூபாயையும் கடந்து விற்பனையானது. 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. அந்த வகையில்ன் தொடர்ந்து 4வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. 
சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 128 ரூபாய் குறைந்து, 28 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 16 ரூபாய் குறைந்து, மூவாயிரத்து 618 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி விலையும் கிராமுக்கு 40 காசுகள் குறைந்துள்ளது. 
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 50 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 400 ரூபாய் குறைந்து 50 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.