பேனர் விவகாரம்: முன்னாள் கவுன்சிலர் கைது

பேனர் விவகாரம்: முன்னாள் கவுன்சிலர் கைது  


சென்னை:

 சென்னையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட , 'பேனர் ' சரிந்து சுபஸ்ரீ என்ற மென்பொறியாளர் இறந்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை , கிருஷ்ணகிரியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, குரோம்பேட்டை, பவானி நகரை சேர்ந்தவர் சுபஸ்ரீ,23. கடந்த 12ம் தேதி பணி முடிந்து, பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில், வீடு திரும்பிய போது, பள்ளிக்கரணை அருகே சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்தது. அவர் நிலைதடுமாறி விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறி, சம்பவ இடத்திலேயே இறந்தார்.


பள்ளிக்கரணை, சக்கரவர்த்தி நகரை சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் 56, என்பவர் வைத்திருந்த பேனர் தான் சுபஸ்ரீ உயிரை பறித்தது. 

இந்த விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து போலீசார் தண்ணீர் லாரி ஓட்டுனர் மனோஜ் 25, என்பவரை கைது செய்தனர். ஆனால், சுபஸ்ரீயின் இறப்புக்கு காரணமான சட்ட விரோத பேனர் வைத்தவரான ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.

இந்த விவகாரத்தில், சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்த பின்னர், ஜெயகோபால், இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டதுடன், 'கொலை நோக்கமற்ற மரணம்' என்ற சட்டப்பிரிவின் கீழ், ஜெயகோபால் மற்றும் அவரது மைத்துனர் மேகநாதன் மீது வழக்கு பதிந்தனர். 

பள்ளிக்கரணை போலீசாரும் ஜெயகோபால் மீது ஜாமினில் வெளிவரக்கூடிய சாதாரண பிரிவின் கீழ் தான் வழக்குப்பதிவு செய்தனர். சுபஸ்ரீ இறந்து 15 நாட்கள் ஆகியும் ஜெயகோபால் கைது செய்யப்படவில்லை. 

இவர்கள் குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளதாகவும், ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாகவும் போலீசார் கூறினர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில், உள்ள ரிசார்ட் ஒன்றில் தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.