கர்நாடகாவில் மழை: மஞ்சள் ‘அலர்ட்‘

கர்நாடகாவில் மழை: மஞ்சள் ‘அலர்ட்‘ 


பெங்களூரு:

பெங்களூரு, பெங்களூரு புறநகர், மைசூரு உள்பட சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. 

நேற்று பெங்களூரு நகரில் சில இடங்களில் மழை பெய்தது. பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசாக இடி இடித்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 27-ந் தேதி வரை 4 நாட்கள் கனமழை பெய்யும் என்று நேற்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. 

அதாவது வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்து உள்ளதால் கனமழை பெய்ய உள்ளது.

அதன்படி, பெங்களூரு, பெங்களூரு புறநகர், துமகூரு, ராமநகர், கோலார், மைசூரு, மண்டியா, குடகு, ஹாசன், சிக்கமகளூரு, சிக்பள்ளாப்பூர், சாம்ராஜ்நகர், பீதர், தார்வார், கதக், ஹாவேரி, கலபுரகி, கொப்பல், ராய்ச்சூர், விஜயாப்புரா, யாதகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை(புதன்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடலோர கர்நாடக மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களுக்கு நாளை(புதன்கிழமை) முதல் 27-ந் தேதி காலை 8.30 மணி வரை மஞ்சள் ‘அலர்ட்‘ விடுக்கப்பட்டு உள்ளது. 


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.