119 வது புரட்டாசி மாதம் காய் கறி திருவிழா மெய் வழி சாலையில்!

119 வது புரட்டாசி மாதம் காய் கறி திருவிழா மெய் வழி சாலையில்! 


மெய்வழிச்சாலை இந்தியாவில் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில், அன்னவாசலுக்கு அருகில் உள்ளது.
குருபெருமான் மெய்வழி சாலை ஆண்டவர்கள் திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டி என்ற குக்கிராமத்தில் கி.பி.1855 ஆம் ஆண்டு சாதாரண ஏழை முஸ்லீம் விவசாய குடும்பத்தில் பிறந்தவா். 
குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பு படிக்க இயலாமல் விவசாயத்தையும் ஆடு மாடு மேய்க்கும் தொழிலாபரணத்தையும் மேற்கொண்டாா். 

தன் மத பெரியவா் ஒருவா் மனிதனின் பிறப்பின் நோக்கமே அனியாய மரணம் அடைந்து எமனிடம் போகாமல் நியாய மரணம் அடைந்து இறைவன் திருவடி சோ்வதே என்று கூற, அதிலிருந்து இவாின் நோக்கம் பாா்வை எல்லாமே அநியாய மரணத்திலிருந்து தப்பிப்பது எப்படி? என்ற ஏக்கத்தால் ஞான வேட்கை பிறக்கிறது.
பிறப்பால் முஸ்லீமாக இருந்தாலும் தன் மத வேதத்தையும் சைவ வைஷ்ணவ வேதங்களையும் இதற்காக அலசி ஆராய்கிறாா். ஆச்சாியமளிக்கும் விதத்தில், எல்லா மதங்களுமே தங்களுடைய பாணியில் இதையே போதிப்பதை அறிகிறாா். 

இறுதியில் ஒரு மெய்யான குருவை அடைந்து அவாின் கருணையினால் இறைவனை அறிந்து அநியாய மரணத்திலிருந்து தப்பிக்கலாம் என உணா்கிறாா். அதிலிருந்து ஒரு மெய் குருவை தேடுவதை தன் வழக்கமாக்கிக்கொள்கிறாா்.
முகம்மது சாலிஹ் என்ற இயற்பெயர் கொண்ட தணிகைமணிப் பிரான் என்ற பொிய மகானை சந்திக்கிறார். சந்தித்து தன்னை சீடனாக ஏற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார். 
அவ்வாறே தணிகைமணிப் பிரான் அவர்களும் இவரை சீடராக ஏற்றுக்கொண்டு அகில வளம் வந்து ஞானத்தை அளிக்கிறாா். இதேபோல் மக்களுக்கும் ஞானம் அளித்து எமனிடமிருந்து காப்பாற்றுமாறு கட்டளையிடுகிறாா்.
குருவின் கட்டளையை ஏற்றுக் கொண்டு "மரணம் இல்லா பெரு வாழ்வு" என்பது என்ன? என்பதை பற்றி மக்களின் அறிவை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு கூறுகிறார். 
மற்ற ஞானியர் போல் வாயால் சொல்லி விட்டு செல்லாமல், செயலில் காட்டி வருகிறார். 

மெய்வழி சாலை மக்களுக்கு ஒரு தேதியை அறிவித்து, அனைவரையும் ஒரே இடத்தில் அமர வைத்து அவரின் தவ வலிமையால் (உபதேசம்)  "தன் ஜீவனை" ஒவ்வொருவருக்கும் காண செய்த அகில உலக பிதா இவரே ஆவார். 
தன் ஜீவனை கண்டவர்களுக்கு "அனந்தர்", "அனந்தி" என்ற பட்டம் அளித்து,  பெயருக்கு முன் "மெய் வழி" என்று பெயர் வைத்து,  தலையில் சிகப்பு தலப்பா அணிவித்து பெருமைப்படுத்தினார்.
 தற்போது வரும் அனைவரும் வெள்ளை தலப்பா அணிகின்றனர்.

இவரை நம்பி இவர் ஒருவரே தெய்வம் என வணங்குபவருக்கு மூல மந்திரம் சொல்லி கொடுத்து எமனிடம் சிக்க வைக்காமல் காப்பாற்றி வருகிறார். 
இதில் வியக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மெய் வழி மக்களுக்கு உடலில்  10 விதமான அதிசயத்துடன் அடக்கம் (மரணம் இல்லா பெரு வாழ்வு) தன் தவத்தால் கொடுத்து வருகிறார். 


வருடா வருடம் புரட்டாசி மாதம் காய் கறி திருவிழா மெய் வழி சாலையில் கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் 69 ஜாதி மக்கள் அனைவரும் ஒன்று  சேர்ந்து  119 வது புரட்டாசி மாதம் காய் கறி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒவ்வொருவரும் காய்கறிகள், பருப்பு, அரிசிகளை வைத்துக்கொண்டு நீண்ட வரிசையில் நின்றனர். 
தற்போதைய மெய் வழி சபைக்கரசருமான சாலை வர்க்கவானிடம் இருந்த காய்கறி, அரிசி, பருப்புகளை மகிழ்ச்சியுடன் கொடுத்தனர். 

தொடர்ந்து, அனைவரிடம் இருந்து பெறப்பட்ட அரிசி மற்றும் காய்கறிகளைக் கொண்டு சமையல் செய்து சபைக்கரசர் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கினார். 


இங்கு நடைபெறும் அனைத்து விழாவும் சமத்துவ விழாவாகவே கொண்டாடப்படும்.  அடுத்து தை மாதம்  பொங்கல் பண்டிகைக்கு வெளியூரிலிருந்து மெய் வழி மக்கள் அனைவரும் சேர்ந்து சமத்துவ பொங்கல் விழா நடத்துவார்கள்.


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.