தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு!

தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு! 


சென்னை:

இந்தியாவில் கடந்த மாதம் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து, சவரன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. இதேபோல் வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்தது. 

அதன்பின்னர், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்த மாத துவக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. எனினும் ஆபரண தங்கத்தின் விலை 29 ஆயிரத்தில் இருந்து குறையவில்லை.

நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை, ஒரு சவரன் ரூ.29 ஆயிரத்து 304 என்ற நிலையில் இருந்தது. ஒரு கிராம் 3663 ரூபாயாக இருந்தது. 

இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது தங்கம் விலை சற்று உயர்ந்தது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.29,496 என்ற அளவில் விற்பனை ஆனது. 

கிராமுக்கு 24 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.3687-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் 24 கேரட் தங்கம் ஒரு சவரன் 30  ஆயிரத்து 816 ரூபாய்க்கும், ஒரு கிராம் 3852 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. 

வெள்ளி விலை இன்று காலை நிலவரப்படி கிலோவுக்கு 900 ரூபாய் உயர்ந்தது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.49 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் 49 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை ஆனது. 
Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.