26-ந்தேதி பள்ளிகள் விடுமுறை- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

26-ந்தேதி பள்ளிகள் விடுமுறை-  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 


சென்னை:

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த முறை ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாளில் தீபாவளி பண்டிகை வருவதால் தொடர் விடுமுறைக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.
 
26-ந்தேதி சனிக்கிழமை கூட பள்ளிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடத்திற்கு 210 நாட்கள் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்ற விதியின்படி தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 26-ந்தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் சனிக்கிழமையும் விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீபாவளிக்கு முன்னதாக சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது (26-ம் தேதி)  பள்ளிகளுக்கு விடுமுறையாக அறிவித்து பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.