மசூதியில் திடீர் குண்டு வெடிப்பு: 62 பேர் பலி

மசூதியில் திடீர் குண்டு வெடிப்பு: 62 பேர் பலி


ஜலலாபாத் :

ஆப்கானிஸ்தானில், மசூதியில் குண்டு வெடித்ததில், 62 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஆசிய நாடான ஆப்கனின், நன்கார்கர் மாகாணத்தின் தலைநகரான ஜலலாபாதில் உள்ள மசூதியில், வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. அப்போது, திடீரென குண்டு வெடித்தது.

இதில், மசூதியின் கூரை தகர்ந்து சரிந்தது. இந்த குண்டு வெடிப்பில், 62 பேர் பலியாகினர்; 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


குண்டு வெடிப்பில், மசூதி பலத்த சேதமடைந்து உள்ளது. இந்த தாக்குதலுக்கு, எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், தலிபான் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என, பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். '

ஆப்கனில் நடக்கும் வன்முறைகளை, எந்த வகையிலும் ஏற்க முடியாது. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு, அப்பாவி மக்கள் பலியாகின்றனர்' என, ஐ.நா., சார்பில், சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 


இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அடுத்த சில நாட்களில், மசூதியில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.


Labels:

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.