தென் பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிலநடுக்கம்!

தென் பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிலநடுக்கம்! 


* நியூசிலாந்தில் உள்ள புகழ்பெற்ற டோங்காரிரோ தேசிய பூங்காவில் மலையேற்றத்தில் ஈடுபட்டபோது சீனாவை சேர்ந்த 51 வயது பெண் மாயமானார். இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.


* கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள நெபியான் மாவட்டத்தில் ஒரு வீட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


* தென் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான வானாட்டில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. 


இது ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* ஜப்பானை கடந்த வாரம் புரட்டி போட்ட ஹகிபிஸ் புயலின் தாக்கத்தில் இருந்து அந்தநாடு இன்னும் மீளாத நிலையில், மேலும் 2 சக்தி வாய்ந்த புயல்கள் ஜப்பானை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 


அந்த வகையில் இன்று (செவ்வாய்க் கிழமை) நியோகுரி என்ற புயல் தலைநகர் டோக் கியோவை தாக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.Labels:

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.