இவரால் கலங்கும் போக்குவரத்து காவலர்கள்!

இவரால் கலங்கும் போக்குவரத்து காவலர்கள்! சென்னை:

போக்குவரத்து காவலர்களுக்கு  3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிடை  மாற்றம் நடைபெறும். இந்த நிலையில் சென்னை  வடக்கு மண்டலத்தை எடுத்து கொண்டால் எப்போதும் மாற்றம் நடைபெறும் போது பரபரப்பு ஏற்படுவது வழக்கம். 

அதே போல் இந்த முறை போக்குவரத்து உதவி  ஆணையர் அமுல் தாஸ் கீழ் பணி  புரியும் எழுத்தர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் அன்பழகன் என்பவர் போக்கு வரத்து காவலர்களிடம் தொடர்ந்து பணியிடை மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கி வருவதாக போக்குவரத்து காவலர்கள் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். 

ஜெய், சாந்த குமார், முருகானந்தம், முனி வரதன் போன்ற பலர் ரூ.4,000 முதல் ரூ.20,000 வரை பணியிடை மாற்றம் நடைபெறும் போது பணம் கொடுத்து வருவதாக  தகவல்கள் கசிந்து வருகிறது. 

இவர்களின் பணி நியமன ஆணையை எடுத்து பார்த்தால் பணம் வரும்  ராயபுரம், எண்ணூர், திருவொற்றியூர் போன்ற காவல் நிலையத்திலேயே மாறி,மாறி பணி புரிந்து வருவது  தெரிய வரும் என்கின்றனர் சக காவலர்கள். நேர்மையாக பணி புரிந்த எங்களுக்கு இது தான் முடிவா? என்று வேதனை அடைகின்றனர்.  

இதனால் பல காவலர்கள் மன உளைச்சளுடன் நாங்கள் கேட்ட காவல் நிலையம் கிடைக்க வில்லை என்று துணை ஆணையரிடம் புகார் கொடுத்து வருகின்றனர்.

    

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.