இனி கேஸ் சிலிண்டருக்கு டிப்ஸ் கொடுக்க வேண்டாம்!

இனி கேஸ் சிலிண்டருக்கு டிப்ஸ் கொடுக்க வேண்டாம்!  


சென்னை:

சமையல் முதல் அனைத்து வீட்டு உணவு வேலைகளுக்கும் கேஸ் சிலிண்டர் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. தமிழகம் முழுவதும் கேஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை. 

எளிய வசதியாக  ஆன்லைன் அல்லது தொலைபேசி எண் மூலம் கேஸ் முன் பதிவு செய்யும் சிறப்பு வசதியும் வந்து விட்டது.  

இதில் பாரத், இந்தியன் போன்ற பெட்ரோலிய நிறுவனங்கள் மூலம் தயார் செய்யப்பட்டு தனியார் பெயர் கொண்ட நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. 

விநியோகம் செய்யும் நபர் கேஸ் சிலிண்டரை சரியாக பரிசோதனை கூட செய்து காட்டாமல் அவருக்கு  வேண்டிய டிப்ஸ் சை மட்டும் கேட்டு வாங்கி கொள்கின்றனர். 

இந்த புகார் தொடர்ந்து வரும் நிலையில் இன்று கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் ஒரு வீட்டில் கேஸ் வியோகம் செய்யும் போது அந்த ரசீதில் ரூ.620 அச்சிடப்பட்டுள்ளது. 

ஆனால் விநியோகம் செய்யும் நபர் ரூ.660 வாங்கி சென்றுள்ளார். உடனே அந்த வீட்டுக்காரர் விஷால் பாரத் கேஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். 

வீட்டுக்காரர்: அரசு ரசீது க்கு மேல் பணம் வாங்க சொல்லுகிறதா?

அலுவலக ஊழியர்: இல்லை சார்.

வீட்டுக்காரர்: நீங்கள் ரசீது க்கு மேல் பணம் வாங்க சொல்லுகிறீர்களா?

அலுவலக ஊழியர்: இல்லை சார்.

வீட்டுக்காரர்: பிறகு எதற்கு ரசீது க்கு மேல் பணம் கொடுக்க வேண்டும்? விளக்கம் தாருங்கள் சார்? 

அலுவலக ஊழியர்: நீங்கள் விருப்பப்பட்டால் கொடுக்கலாம், கட்டாயம் இல்லை சார்.

வீட்டுக்காரர்: ஆனால் கட்டாயம் கொடுக்க வேண்டும், இது எங்கள் வண்டிக்கு கூலி என்று சொல்லுகிறார்களே!

அலுவலக ஊழியர்: மன்னித்து விடுங்கள் சார், இதே மாதிரி இனி பணம் கேட்டால் 044 25910236 இந்த எண்ணுக்கு புகார் கொடுங்கள், இனிமேல் கூடுதல் பணம் கொடுக்க வேண்டாம்.

       
இதே மாதிரி படிக்க தெரியாத மக்கள் கூடுதலாக ரூ.20 முதல் ரூ.100 வரை  பணம் கொடுத்து தான் வருகின்றனர். இதற்கு கேஸ் நிறுவனம் விழிப்புணர்வு கொடுக்குமா? பார்ப்போம்.
      

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.