ஓட்டுப்பதிவை கண்காணிக்க வெப் "கேமரா"வா?!

ஓட்டுப்பதிவை கண்காணிக்க வெப் "கேமரா"வா?! 


''இடைத்தேர்தல் நடக்க உள்ள இரண்டு சட்டசபை தொகுதிகளிலும் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் 'வெப் கேமரா' பொருத்தப்படும்'' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

இடைத்தேர்தல் நடக்கும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டசபை தொகுதிகளில் 'பூத்' சிலிப் வழங்கும் பணி இன்று நிறைவடையும். இரு தொகுதிகளிலும் வாகன சோதனையின் போது 50.43 லட்சம் ரூபாய் ரொக்கம் 27.11 லட்சம் ரூபாய் மதுபானம் என மொத்தம் 95.67 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விக்கிரவாண்டி தொகுதியில் 275 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில் 50 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை. நாங்குநேரி தொகுதியில் உள்ள 299 ஓட்டுச்சாவடிகளில் 110 பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. 

இவற்றில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் 'வெப் கேமரா' பொருத்தப்பட்டு ஓட்டுப்பதிவு இணையதளத்தில் ஒளிபரப்பப்படும்.வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் பெரம்பலுார் மாவட்டத்தில் 97 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் பெயரை சரி பார்த்துள்ளனர். 

இதற்கு அடுத்தபடியாக அரியலுார் மாவட்டத்தில் 87 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் பெயரை சரி பார்த்துள்ளனர். சென்னையில் 12 சதவீதம் பேர் சரி பார்த்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

பணம் பட்டுவாடா அறிக்கை கேட்பு!


நாங்குநேரி சட்டசபை தொகுதியில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 


பணம் வழங்கியவர்களை பிடித்து 2.87 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். தகவல் அறிந்து வருமான வரித்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தி உள்ளனர். 

இவ்விவகாரம் தொடர்பாக காவல் துறை வருமான வரித்துறை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. அறிக்கை அடிப்படையில் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.


Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.