இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி, உண்மைக்கு கிடைத்த வெற்றி!

இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி, உண்மைக்கு கிடைத்த வெற்றி!


சென்னை:


''இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி, உண்மைக்கு கிடைத்த வெற்றி,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அவர் அளித்த பேட்டி:இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. எதிர்பார்த்தபடி மிகப்பெரிய வெற்றியை, இரண்டு தொகுதிகளிலும், வாக்காளர்கள் அளித்துள்ளனர்; அவர்களுக்கு நன்றி. சிறப்பாக பணியாற்றிய, அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி.

ஏற்கனவே, விக்கிரவாண்டியில், தி.மு.க.,வும், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றிருந்தன. இரு கட்சிகளிடமிருந்தும், அந்த தொகுதிகளை, நம் கட்சி கைப்பற்றி உள்ளது. அதற்காக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கும், கூட்டணி கட்சியினருக்கும், ஓட்டளித்த வாக்காளர்களுக்கும் நன்றி.


லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில், மக்களிடம் உண்மையை கூறினோம். அப்போது, மக்கள் நம்பவில்லை. தி.மு.க.,வின் பொய் பிரசாரத்தை நம்பி ஏமாந்தனர். தற்போது, மக்களுக்கு உண்மை தெரிந்து விட்டது. எனவே, உண்மைக்கு கிடைத்த வெற்றி.வரும், 2021 சட்டசபை பொதுத் தேர்தலுக்கான முன்னோட்ட தேர்தலில், நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்; இந்த வெற்றி தொடரும். கூட்டணி கட்சியினர் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். வருங்காலத்தில், இந்த கூட்டணி தொடரும்.

உள்ளாட்சி தேர்தலிலும், இந்த வெற்றி தொடரும். தற்போது, இரண்டு அணிகள் என்பது உறுதியாகி விட்டது; மக்களும் தீர்மானித்து விட்டனர்.உள்ளாட்சி தேர்தலை, மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும்; 


அரசு அறிவிக்க முடியாது. மகாராஷ்டிராவில், பிரதமரின் செல்வாக்கு காரணமாக, பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். ஹரியானாவிலும், பா.ஜ., ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆறு மருத்துவக் கல்லுாரிகளை, ஒரே நேரத்தில், வரலாற்று நிகழ்வாக, பிரதமர் தந்துள்ளார். இந்தியாவிலே அதிக மருத்துவக் கல்லுாரிகள் உள்ள மாநிலம், தமிழகம்.மத்திய, மாநில அரசுகள் இணைந்து, ஆறு மாவட்டங்களில், மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க உள்ளோம். நம் கோரிக்கையை ஏற்று, ஆறு மருத்துவக் கல்லுாரிகள் தந்த பிரதமருக்கு, தமிழக மக்கள் சார்பில் நன்றி. அ.தி.மு.க., பொதுக்குழு, விரைவில் கூட்டப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
முரசொலி நிலம் எடப்பாடி பதில்:

''முரசொலி அலுவலக நிலத்தின், உண்மைத்தன்மை குறித்து ஆராயப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள, 'முரசொலி' நாளிதழ் அலுவலகம், பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, முதல்வர் கூறுகையில், ''முரசொலி அலுவலகம் கட்டப்பட்டுள்ள, நிலத்தின் உண்மைத்தன்மை ஆராயப்படும். அது, பஞ்சமி நிலமாக இருந்தால், அரசு நடவடிக்கை எடுக்கும்,'' 
என்றார்.


Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.