கார்பரேட் வரி குறைப்பு I.M.F!

கார்பரேட் வரி குறைப்பு I.M.F!வாஷிங்டன்: 

இந்தியாவில் கார்ப்பரேட் வரி குறைப்பு, முதிலீட்டிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என ஐ.எம்.எப்., பாராட்டியுள்ளது.இது தொடர்பாக ஐஎம்எப் அமைப்பின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் சாங்கோங் கூறியதாவது:


 இந்தியாவுக்கு இன்னும் நிதி பரிவர்த்தனை சார்ந்த எல்லைகள் உள்ளன. இதனால், கவனமாக இருக்க வேண்டும். இந்தியாவில் கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டதை நாங்கள் ஆதரிக்கிறோம். 

இது முதலீட்டிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். இந்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.1 சதவீதமாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2020 ல் 7.0 சதவீதமாக இருக்கும் என்றார்.

ஐஎம்எப்.,பின் ஆசிய பசிபிக் துறையின் துணை இயக்குனர் அன்னே மேரி குல்ட் உல்ப் கூறியதாவது: வங்கி அல்லாத நிதித்துறை பிரச்னைகளை இந்தியா கையாள வேண்டும். 

பொதுத்துறை வங்கிகளை மறு மூலதனமாக்குவதற்கான முயற்சிகள் உட்பட முன்னேற்றங்கள் இருந்த போதிலும், வங்கி சாரா நிதி நிறுவனங்ள் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. 

இது குறித்து அரசும் தெரிந்து வைத்துள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.


Labels:

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.