மீட்பு பணியினர் தீவிரம்: நம்பிக்கை இழக்காத பெற்றோர்கள்

மீட்பு பணியினர் தீவிரம்: நம்பிக்கை இழக்காத பெற்றோர்கள் 


திருச்சி : 

திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி, தொடர்ந்து 22 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. 

குழந்தையை மீட்கும் முயற்சியில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். நவீன இயந்திரங்கள் மூலம் சுஜித்தை மீட்கும் பணி நடக்கிறது. ஆனால், ஆழ்துளை பகுதியில் மண் ஈரமாக இருப்பதால் குழந்தையை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிறுவன் 80 அடி ஆழத்திற்கு சென்று விட்டதாக தெரிகிறது.

ஹைட்ராலக் கருவி மூலம் சுஜித்தை மீட்கும் மற்றொரு முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


மீட்பு பணி தீவிரம்

திருச்சி, மணப்பாறை அருகே, வேங்கைக்குறிச்சி நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது மனைவி கலாராணி.இவர்களின் மகன் சுஜீத் வில்சன், 2. ஆரோக்கியராஜ் வீட்டுக்கு பக்கவாட்டில், அவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. 

மழை பெய்ததால், சோளம் பயிரிட்டுள்ளனர். நிலத்தில், நான்கு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டு, துார்ந்து போன ஆழ்துளை கிணறு, மூடப்படாமல் உள்ளது. நிலத்தில், ஒரு அடிக்கு மேல் சோளம் வளர்ந்துள்ளது. நேற்று(அக்.,25) மாலை, 5:30 மணியளவில், கலாராணி மற்றும் சிலர், வீட்டின் முன் இருந்துள்ளனர்.

பக்கவாட்டு நிலத்தில், சுஜீத் வில்சன் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென குழந்தையின் அலறல் கேட்டுள்ளது. ஓடிச் சென்று பார்த்தபோது, மூடாமல் விட்ட ஆழ்துளைகிணற்றில், குழந்தை விழுந்தது தெரிந்தது.

தகவலறிந்து, மணப்பாறை போலீசார், தீயணைப்பு துறையினர் வந்தனர். சுஜித், 20 - 25 ஆடி ஆழத்துக்குள் இருப்பது தெரிந்தது. ஆழ்துளை குழாயின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது. பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, பள்ளம் தோண்டும் பணி, தீவிரமாக நடந்தது.

தோல்வி

ஒருபுறம் குழந்தையை மீட்க, தீயணைப்பு துறையினர் போராட, மறுபுறம், குழந்தைக்கு எதுவும் நடக்காத வகையில், டாக்டர்கள் குழுவினர், ஆழ்குழாய் உள்ளே ஆக்சிஜன் செலுத்தினர். குழிக்குள் விழுந்த குழந்தை பயப்படாமல் இருக்க, குழிக்குள் விளக்கும், குழந்தையை கண்காணிக்க, கேமராவும் பொருத்தப்பட்டது. மணிகண்டன் என்பவர் வடிவமைத்த பிரத்யோக கருவி வரவழைக்கப்பட்டு குழந்தையை மீட்கும் பணி நடந்தது . இம்முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, பின்னர் கோவையிலிருந்தும் மீட்பு குழுவினர் வந்து முயற்சித்தனர்.


இந்த முயற்சியும் தோல்வியடைந்ததால். மீண்டும் பக்கவாட்டில் பொக்கலைன் மூலம் நாலாபுறம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்க முயற்சி நடந்தது. 15 அடிக்கு கீழே பாறை தென்பட்டதால் பள்ளம் தோண்டும் பணியும் கைவிடப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் 20 அடியில் சிக்கிய குழந்தை 80 அடிக்கு சென்று விட்டார். தற்போதைய நிலையில், குழந்தை அசைவற்ற நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது.

நம்பிக்கையுடன் மீட்பு பணி

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை செயலாளர், ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், சிறுவனை மீட்கும் பணியில் 6 குழுக்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று (அக்.,25)இரவு பின்னடைவு ஏற்பட்டது. 20 அடியில் மீட்கப்படும் நிலையில், சிறுவன் 70 அடிக்கு இறங்கினார். சிறுவனுக்கு பிராண வாயு அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை குரல் கேட்கவில்லை என அமைச்சரும், அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.


சென்னை மவுலிவாக்கத்தில் 3 நாட்களுக்கு பிறகு ஒடிசாவை சேர்ந்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். நம்பிக்கையை தளர விடாமல், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். 


தகவல் வந்த உடனே, கலெக்டர், டிஆர்வுவும் விரைந்து சென்றனர். தீயணைப்பு படையினரும் உடனடியாக சென்றனர். ஆழ்துளை கிணறு மிகவும் குறுகிய நிலையில் உள்ளதால், மீட்பு பணி சவாலாக உள்ளது. மெட்ரோ ரயில் திட்ட வல்லுநர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினரிடமும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

நம்பிக்கை இழக்காத பெற்றோர்கள் 


சுஜீத்தை பத்திரமாக மீட்க பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.