ஆன்லைன் மூலம் பட்டாசு விற்க தடை!

ஆன்லைன் மூலம் பட்டாசு விற்க தடை! 

ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, ஆன்லைன் மூலம் பட்டாசு விற்க தடை விதிக்க கோரி, பட்டாசு வியாபாரி ஷேக் அப்துல்லா என்பவர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆன்லைனில் பட்டாசுகள் விற்க தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த தடை உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை துணைத்தலைவர் சஞ்சனா சர்மா, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோருக்கு எதிராக ஷேக் அப்துல்லா நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் மீது அதிகாரிகள் நடவடிக்கவில்லை என முறையிட்டிருந்தார். 
தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி சட்டவிரோதமாக ஆன்லைனில் பட்டாசு விற்பனைகள் துவங்கி  விட்டதால், அத்தகைய இணையதளங்களை முடக்க சைபர் குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரியுள்ளார்.
இதை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, ஏற்கெனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள  உத்தரவின்படி, ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க ஆணையிட்டார். 
மேலும் ஆன்லைன் மூலம் பட்டாசுகள் விற்பது தண்டனைக்குரிய குற்றம் என விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.