இனி பொது தேர்வு எழுத கூடுதல் நேரம்!

இனி பொது தேர்வு எழுத கூடுதல் நேரம்! 

சென்னை:

தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாவது வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் தேர்வெழுத 2.30 மணி நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

இதற்கிடையே, தமிழகத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதுவதற்கு மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வெழுத கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.


இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்:

புதிய பாடத்திட்டத்தால் தேர்வெழுத கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. 

இதையடுத்து, பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இனி 3 மணி நேரம் எழுத அனுமதிக்கப்படுவர். இந்த நடைமுறை நடப்பாண்டிலேயே அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.