ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை: அலைமோதும் பயணிகள் கூட்டம்!

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை: அலைமோதும் பயணிகள் கூட்டம்!  


ஆயுத பூஜை, விஜயதசமி வருகிற திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை வருவதால் இன்று சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

இதனால் அரசு பணியில் உள்ள பெரும்பாலானோர் நேற்று முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கிவிட்டனர்.


பண்டிகை நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த ஆயுத பூஜையை முன்னிட்டு முதன் முதலாக சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்குகிறது. 

மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே.நகர், பூந்தமல்லி, கோயம்பேடு பஸ் நிலையங்களில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,225 பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை மொத்தம் 6,145 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து நேற்று இரவு வரை 3,155 பஸ்கள் இயக்கப்பட்டன. வழக்கமாக செல்லும் 2,225 பஸ்களுடன் 930 சிறப்பு பஸ்களும் புறப்பட்டு சென்றன. 

இந்த பஸ்கள் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 375 பயணிகள் பயணம் செய்துள்ளனர். நேற்று எதிர்பார்த்ததைவிட கூட்டம் குறைவாக இருந்ததால் சிறப்பு பஸ்கள் முழுமையாக இயக்கப்படவில்லை.


ஆனால் இன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று 2,990 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்னையில் இருந்து காலை முதல் பஸ்கள் இயக்கப்பட்டன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு செல்வதால் அனைத்து பிளாட் பாரங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பஸ்கள் நுழைவு பகுதியை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் மாற்றம் செய்துள்ளனர்.

இதற்காக பஸ் நிலைய சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை அவர்கள் இடித்துள்ளனர். இதன் மூலம் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு செல்லும் பஸ்கள் எளிதாக வந்து செல்லும் வண்ணம் 2 நாட்களுக்கு முன்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தினர். இரு மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களும் நிரம்பின. கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வட்டார போக்குவரத்து சிறப்பு படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சிறப்பு குழுக்களின் கண்காணிப்பில் ஆம்னி பஸ்கள் இருந்தாலும் அதிக கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று பயணிகள் வேதனை அடைந்தனர்.Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.