தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் விரைவில்!

தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் விரைவில்! 


புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. 

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் புதிதாக 75 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 
அதில், தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

325 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும். இதில், மத்திய அரசு சார்பில் 195 கோடி ரூபாயும், மாநில அரசு சார்பில் 130 கோடி ரூபாயும் அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

என தெரிவித்தார்.


Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.