துணி கடையை விட மருத்துவமனைக்கு அலைமோதும் கூட்டம்!

துணி கடையை விட மருத்துவமனைக்கு அலைமோதும் கூட்டம்! 


ஆவடி புதிய ராணுவ சாலையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. தரைத்தளத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, மருந்தகம், ஊசி போடும் அறை, புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. முதல் தளத்தில் ஆண்கள் உள்நோயாளிகள் பகுதியும் இரண்டாவது தளத்தில் பெண்கள் உள்நோயாளிகள் பிரிவு உள்ளது.

 இங்கு தினசரி 100-க்கும் மேற்பட்டவர்கள் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். மழைக்காலங்களில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 

இதனால் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் பலர் மருத்துவமனையில் கீழே படுத்து சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆவடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

நாளுக்கு நாள் மருத்துவமனையில் கூட்டம் அதிகரிக்கிறது. அவர்களில் பலர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு செல்கின்றனர்.

 இதற்கு போதிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாததே காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது: 

‘இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஒரு பணியாளர் என 16 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

நோயாளிகளுக்கு சீட்டு வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பகலில் இருவர், இரவில் இருவர் என நான்கு பேர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது மருத்துவமனையில் இப்பணிகளை மேற்கொள்ள ஒரே ஒரு நபர் தான் உள்ளார்.

இந்நிலையில் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனையில் கூட்டம் அலைமோதுகிறது.


மருத்துமனையில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் நோயாளிகள் கூட்டத்தை கையாள முடியாமல் ஊழியர்கள் திணறி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்” என்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனையில் துணிக்கடையை விட  கூட்டம்  அலைமோதுகிறது.

டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


      Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.