கடந்த முறை கடைபிடித்ததை இந்த முறை கடைபிடிக்க முடியாது!

கடந்த முறை கடைபிடித்ததை இந்த முறை கடைபிடிக்க முடியாது!


இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.


பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா விரைவாக மூன்று விக்கெட்டுக்களை இழந்த போதிலும், தொடக்க வீரர் டீன் எல்கர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 160 ரன்கள் குவித்தார்.இவரது ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா மிகப்பெரிய ரன் இடைவெளியை தவிர்த்தது. சிறப்பாக விளையாடிய  டீன் எல்கர், இந்திய மண்ணில் விளையாடுவது மிகக் கடினம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டீன் எல்கர் கூறுகையில் ‘‘மீண்டும் அணிக்கு என்னுடைய பங்களிப்பை அளித்தது மிகவும் சிறப்பான ஒன்று. இந்தியாவில் விளையாடுவது மிகக் கடினம். நான் கடந்த முறை இங்கு வந்தபோது, எனக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைத்தது. இந்த நான்கு வருடத்தில் நான் சிறந்த கிரிக்கெட்டராக வளர்ந்துள்ளேன். கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடியது உதவியாக இருந்தது.

கடந்த முறை கடைபிடித்ததை இந்த முறை கடைபிடிக்க முடியாது. ஏனென்றால் ஆடுகளத்தின் தன்மை அப்படிபட்டது. சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். அதன்பின் சுழற்பந்தை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடலாம்.

கவுன்ட்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடியது உதவிகரமாக இருந்தது. இந்தியா செல்லும்போது அதிக அளவில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள வேண்டும் என்பது எனக்குத் தெரியும். பந்தை தூக்கி அடித்தது, எனது பலத்தை நான் உணர்ந்துள்ளேன். 


என்னுடைய அந்த பலம், சரியாக கைக்கொடுத்ததற்கு நன்றி சொல்ல வேண்டும்’’ 

என்றார்.
Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.