அரசு அலுவலகங்களில் தீவிர சோதனை!

அரசு அலுவலகங்களில் தீவிர சோதனை! 
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தட்கல் மின் இணைப்பு திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளிடம் லஞ்சம் பெறுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கருணாகரன் தலைமையில் போலீசார் சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் கணக்கில் வராத லஞ்ச பணம் 89 ஆயிரம் ரூபாயை போலீசார், மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ், மின்வாரிய ஊழியர் சரவணன் ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.
இதேபோல் செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில், புதிய ஓட்டுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பு போன்றவற்றிற்கும், எண்ணிக்கைக்கு அதிகமாக ஷேர் ஆட்டோ இயக்குவதற்கும் அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் சிவபாதசேகரன் தலைமையிலான அதிகாரிகள் கணினி உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.
பெரம்பலூரில் மதுபான மொத்த விற்பனை கிடங்கு மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். 7 பேர் கொண்ட குழுவினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட மேலாளர் உட்பட டாஸ்மாக் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதே போன்று புதுக்கோட்டை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர்.
சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சோதனையானது நீடித்து வரும் நிலையில், சிக்கிய கணக்கில் வராத பணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உதகையில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பணிகளை செய்து கொடுக்க அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக வந்த தகவலை அடுத்து இந்த திடீர் சோதனை நடைபெற்று வருகிறது.
வட்ட வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சோதனை நடத்தி கணக்கில் வராத  67,800 ரூபாயை பறிமுதல் செய்த அதிகாரிகள், உதவி இயக்குனர் சிவக்குமார்,உதவியாளர் சுப்ரமணியம் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
திருச்சி திருவெறும்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அலுவலகத்தில் முறைகேடாகவும், புரோக்கர்கள் மூலமாகவும் பத்திர பதிவு நடைபெறுவதாக புகார் வந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மாலை திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது சார்பதிவாளர் அனந்தராமன் மற்றும் ஊழியர்களிடம் அதிகாரிகள் துருவி துருவி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.