டெல்லியில் பள்ளிகள் நவம்பர் 5ம் தேதி வரை விடுமுறை!

டெல்லியில் பள்ளிகள்  நவம்பர் 5ம் தேதி வரை விடுமுறை! 

டெல்லியில் காற்றுமாசு அதிகரித்ததன் எதிரொலியாக நவம்பர் 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால் பொது சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்தியதுடன், இம்மாதம் 5ம் தேதி வரை கட்டிட வேலைகளை தொடரவேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நவம்பர் 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
அதேபோல், வரும் 5ம் தேதி வரை டெல்லி, ஃபரிதாபாத், குருகிராம், காஜியாபாத், நொய்டா ஆகிய பகுதிகளில் கட்டிடப்பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிலக்கரி மற்றும் எரிப்பொருள் சார்ந்த பணிகளை 5ம் தேதிவரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.
தீபாவளியன்று பட்டாசு வெடித்ததாலும், அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாய பதர்களை எரிப்பதாலும் டெல்லியில் காற்றுமாசு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஒரே நாளில் டெல்லியின் காற்றுமாசு தரக்குறியீட்டில் 480 புள்ளிகளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, உத்தரபிரதேசத்தில், விவசாய நிலங்களில் காய்ந்த பயிர்கழிவுகளை எரித்ததாக 300 விவசாயிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பிலிபட் பகுதியில் பயிர்கழிவுகளை எரித்த விவசாயிகள் மீது வழக்கு பதியும்படி உத்தரபிரதேச மாநிலத்தின் தேசிய பசுமை தீர்ப்பாயம் போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதனை ஏற்று  பில்சாண்டா, நெரியா, அமரியா, புரண்பூர், செராமு, மதகோண்டா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 300 விவசாயிகள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். 
பயிர் செய்ததற்கான கடனை கூட அடைக்க முடியாமல் திண்டாடிவருவதாகக் கூறும் விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.