7 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் ஓ.பி.எஸ்

7 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் ஓ.பி.எஸ்   


சென்னை:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுமுறைப் பயணமாக கடந்த செப்டம்பர் மாதம் 13 நாட்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார். 

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக பிரிட்டன், அமெரிக்கா மற்றும் துபாயில் 13 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு 8835 கோடி ரூபாய்  அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 10 நாள் பயணமாக வரும் 7-ம் தேதி அமெரிக்காவுக்கு புறப்படுகிறார். 

இந்த சுற்றுப்பயணத்தின்போது சிகாகோ உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்கிறார். 

துணை முதலமைச்சருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் உடன் செல்கிறார்.Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.