சிதம்பரம் உடல் நிலை நன்றாக தான் உள்ளது- எய்ம்ஸ் மருத்துவர்

சிதம்பரம் உடல் நிலை நன்றாக தான் உள்ளது-  எய்ம்ஸ் மருத்துவர்


புதுடில்லி : 

உடல்நிலையை காரணம் காட்டி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் நிராகரித்துள்ளது. சிதம்பரத்திற்கு திகார் சிறை அறையில் சில வசதிகள் செய்து தர மட்டும் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு ஏற்கனவே ஜாமின் வழங்க கோர்ட் மறுத்துள்ளது. இந்நிலையில், சிதம்பரத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அவருக்கு சிகிச்சை தேவைப்படுவதால் ஐதராபாத் அழைத்து செல்ல வேண்டும். 

அதனால் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார்.


இதனையடுத்து சிதம்பரத்தின் உடல்நிலையை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்யும் படி எய்ம்ஸ் மருத்துவக் குழுவிற்கு டில்லி ஐகோர்ட் நேற்று (அக்.,31) உத்தரவிட்டிருந்தது. 


சிதம்பரத்தின் உடல்நிலையை பரிசோதித்த எய்ம்ஸ் மருத்துவக் குழு, இன்று (நவ.,01) அறிக்கை தாக்கல் செய்தது.அதில், சிதம்பரத்தின் உடல்நிலை நன்றாக உள்ளது. மருத்துவமனையில் அனுமதித்து அவசர சிகிச்சை அளிக்க வேண்டியதில்லை. சிறை அறையை சுத்தம் செய்து, கொசுவலை அளித்தாலே போதும் என கூறி இருந்தது. 

இதனையடுத்து, சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து டில்லி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. மேலும், சிதம்பரத்திற்கு கொசுவலை, முக கவசம் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.

தேவைப்பட்டால் எய்ம்ஸ் மருத்துவக் குழு வாரம் ஒருமுறை சிதம்பரத்தை பரிசோதித்து சிகிச்சை அளிக்கலாம். மருத்துவமனையில் அனுமதித்து சிறப்பு சிகிச்சை அளிக்க தேவையில்லை என மருத்துவக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால், புற நோயாளியாக சிதம்பரத்திற்கு சிகிச்சை அளிக்கலாம் எனவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.