அபராத சீட்டை தமிழில் அச்சடிக்க வேண்டும்- மு.க ஸ்டாலின்

அபராத சீட்டை தமிழில் அச்சடிக்க வேண்டும்- மு.க ஸ்டாலின்  

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் ரசீதை தமிழில் அச்சடிக்காவிட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்பட்டியில் திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். 
அப்போது, போக்குவரத்து துறையில் அபராத கட்டணத்துக்காக வழங்கப்படும் ரசீது விவரங்கள் தமிழில் இல்லை என்று குற்றஞ்சாட்டினார்.
இதை மாற்ற அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையெனில் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றிய மு.க.ஸ்டாலின், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும் என்று கூறினார்.
பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் நம் உயிரோடு கலந்துள்ளனர் என்றும் அவர்கள் நம்மோடு இருக்கும் வரை எந்த கொம்பனும் தமிழகத்தில் நுழைந்து விட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.


Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.