சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்து!

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்து! 

சென்னையில் இருந்து  புறப்பட்ட பயணிகள் விமானம் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 163 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து குவைத்துக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் சரக்கக பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதனை அடுத்து அந்த விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. 
முன்னதாக விமானநிலையத்தில் விமானம் பத்திரமாக தரை இறங்குவதற்கான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இந்த நிலையில் அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் அதில் பயணம் செய்த 163 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.  
விமானத்தில் தீப்பிடித்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.