ஐ.சி.எல் பின்கார்ப் நிறுவனம் தேசிய அளவில் தொடங்க திட்டம்!

ஐ.சி.எல் பின்கார்ப் நிறுவனம் தேசிய அளவில் தொடங்க திட்டம்! 


சென்னை:
 
ஐ.சி.எல் குழுமமானது இப்போது புதிய மைல்கல் சாதனையை எட்டியிருக்கிறது. மேலும், ஐசிஎல் பின்கார்ப் நிறுவனமானது கோல்கத்தாவைச் சேர்ந்த சேலம் ஈரோடு முதலீட்டு நிறுவனத்தை ஏற்றும் நடத்தும் அனைத்துபணிகளையும் மேற்கொண்டுவருகிறது.

அந்தநிறுவனத்தின் 74.27 சதவீத பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கெனவே கையெழுத்திடப்பட்டுள்ளன.

ஐசிஎல் பின்கார்ப் நிறுவனமானது வருவாய்தரக்கூடிய பாதுகாப்பான முதலீட்டுத்திட்டங்களுக்கு வழிவகுக்கும் என்சிடி திட்டத்தை வெளியிடவும் முடிவு செய்துள்ளது. 

நடப்பு நிதியாண்டின் இறுதியில் வெளியிடப்படும் பொது அறிவிப்பின்
மொத்தமதிப்பு ரூ.100 கோடியாகும். இத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரத்தில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உரிமத்தையும் ஐசிஎல் பின்கார்ப் பெற்றுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான
உரிமத்தை பொருளாதார மேம்பாட்டுத்துறையானது வழங்கிவருகிறது.

 இந்த உரிமத்தைப் பெற்றுள்ள ஐசிஎல் பின்கார்ப் நிறுவனம் தனது வர்த்தக நடவடிக்கைகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோட்டல் ஹயாத்தில் இந்தமாத இறுதியில் நடைபெறும் கூட்டத்தில் வாயிலாகத் தொடங்கவுள்ளது. மேலும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் வர்த்தகச் செயல்பாடுகளையும் துவக்கத் தயாராகி வருகிறது.

ஐசிஎல் நிறுவணானது கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரஞ்சலகுடா என்ற இடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு 1991 முதல் செயல்பட்டுவருகிறது.

 தனது நம்பிக்கையான செயல்பாட்டுநடவடிக்கைகளின் மூலமாக 1999-ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப்பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான கே .ஜி. அணில்குமாரின் தலைமையில் ஐசிஎல் பின்கார்ப் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

அவரது வணிக அனுபவம் மற்றும் தொலைநோக்கு பார்வைபோன்ற அம்சங்களின் மூலமாக ஐசிஎல் பின்பார்க் நிறுவனம் அளப்பரிய வளர்ச்சியை எட்டியதுடன் பல தேசிய விருதுகளை நிதித்துறைப்பிரிவில் பெற்றுள்ளது.

ஐசிஎல் நிறுவனமானது தென் இந்தியாவில் மட்டும் 155-க்கும் அதிகமான கிளைகளைக் கொண்டு செயல்பட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு நிதி சார்ந்த சேவைகளை அளித்து வருகிறது.

நகைக் கடன்களை 9 சதவீத வட்டி வீதத்தில் வாடிக்கையாளர்களுக்கு அளித்து நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனமாக விளங்கிவருகிறது. மேலும், பெண்கள் இரண்டுசக்கரவாகனங்களை வாங்குவதற்காக 9 சதவீத வட்டி அளவில் கடனுதவிகளை அளித்துவருகிறது. 

வணிகக் கடன்கள், தனிநபர் கடன், வீட்டுவசதிக் கடன், வாகனக்கடன், பணப்பரிமாற்றம், வெளிநாட்டுபணப்பரிவர்த்தனை, மருத்துவகாப்பீடு என பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது. 

பல்வேறு தொழில்நுட்பமாற்றங்கள் ஏற்பட்ட போதும் வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் நலன்களே முதன்மை என்ற நிலைப்பாட்டுடன் ஐசிஎல் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.

இதன் காரணமாக, 2018-19-ஆம் நிதியாண்டில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது 200 சதவீதத்துக்கும் அதிகமான அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஐசிஎல் பின்கார்ப் நிறுவனமானது கேரளம், தமிழகம், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் மட்டுல்லாது, வடமாநிலப்பகுதிகளிலும் தனது செயல்பாட்டை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. 

2022-ஆம் ஆண்டு இறுதிக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கிளைகளை தேசிய அளவில் தொடங்க ஐசிஎல் பின்கார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.